ADDED : செப் 22, 2026 01:44 AM

பெங்களூரு: ஐ.டி.ஐ., முன்னாள் தலைவர் கே.அழகேசன் எழுதிய புத்தகத்தை, 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, ஐ.டி.ஐ., எனும், இந்திய டெலிபோன் இன்டஸ்டிரீஸ் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் கே.அழகேசன். 1982ம் ஆண்டு உதவி நிர்வாக பொறியாளராக ஐ.டி.ஐ., நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அழகேசன், 2016ம் ஆண்டு உற்பத்தி துறை இயக்குனராக பொறுப்பேற்றார்.
கடந்த 2018 முதல் 2019 வரை, நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் தனது, 38 ஆண்டு கால பணி அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, பெங்களூரு கம்மனஹள்ளியில் உள்ள ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, வருமான வரித்துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் கோ.மணிவாசகம், ஐ.டி.ஐ., நிறுவன முன்னாள் தலைவர் எஸ்.கோபு, தென்மேற்கு ரயில்வே முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் பி.காசி விஸ்வநாதன், லிவியா பாலிமர் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவர் பி.வி.ரமணன் ஆகியோர் வெளியிட்டனர்.
