/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலால் சங்கத்தினர் தள்ளுமுள்ளு விதான் சவுதாவில் பரபரப்பு
/
கலால் சங்கத்தினர் தள்ளுமுள்ளு விதான் சவுதாவில் பரபரப்பு
கலால் சங்கத்தினர் தள்ளுமுள்ளு விதான் சவுதாவில் பரபரப்பு
கலால் சங்கத்தினர் தள்ளுமுள்ளு விதான் சவுதாவில் பரபரப்பு
ADDED : பிப் 22, 2025 05:17 AM
பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில், கலால் சங்கத்தினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு உண்டானது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், அடுத்த மாதம் 3ம் தேதி துவங்குகிறது. 2025 - 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து, பல துறைகளின் அதிகாரிகள், சங்கத்தினருடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று விதான் சவுதாவில் உள்ள தனது அறையில் வைத்து, கலால் அதிகாரிகள், சங்கத்தினருடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டம் முடிந்ததும், சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின், கலால் சங்கத்தின் இருபிரிவினர் இடையில் திடீரென வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
முதல்வர் முன்பு பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறியதால் ஏற்பட்ட தகராறில், தள்ளுமுள்ளு நடந்தது தெரிந்து உள்ளது. இதனால் விதான் சவுதாவில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

