/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரஹ லட்சுமி பணம் 10 நாட்களில் வரும்'
/
'கிரஹ லட்சுமி பணம் 10 நாட்களில் வரும்'
ADDED : பிப் 22, 2025 05:15 AM

பெங்களூரு: ''இன்னும் 10 நாட்களில் கிரஹ லட்சுமி பணம், பெண்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்,'' என்று, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.
கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள, ஐந்து வாக்குறுதி திட்டங்களில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் கிரஹ லட்சுமி திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடைப்பது அரிதாகவே உள்ளது. கடந்த மூன்று, நான்கு மாதங்களாக கிரஹ லட்சுமி பணம் தங்களுக்கு வரவில்லை என்று, மாநிலம் முழுதும் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் நேற்று அளித்த பேட்டியில், ''விபத்தில் சிக்கி, நான் மருத்துவமனையில் இருந்ததால், கிரஹ லட்சுமி திட்ட பணத்தை பெண்கள் கணக்கில் வரவு வைப்பதில் சில சிக்கல் ஏற்பட்டது. அதற்கு முன்பும் பணம் வராதது பற்றி பெண்கள் கூறியது எனது கவனத்திற்கு வந்து உள்ளது.
''இதுபற்றி முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில், பெண்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். தாலுகா பஞ்சாயத்து மூலம், பெண்களுக்கு பணம் செலுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளோம். நான் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கண்டிப்பாக செல்வேன்,'' என்றார்.

