தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நாகேந்திராவை விமர்சிக்க பா.ஜ.,வுக்கு தகுதியில்லை'

 'நாகேந்திராவை விமர்சிக்க பா.ஜ.,வுக்கு தகுதியில்லை'

 'நாகேந்திராவை விமர்சிக்க பா.ஜ.,வுக்கு தகுதியில்லை'


ADDED : ஆக 13, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அமைச்சர் நாகேந்திராவை விமர்சிப்பதற்கு, பா.ஜ.,வினருக்கு தகுதியில்லை,'' என, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கூறியுள்ளார்.

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பா.ஜ.,வினர் முதலில் தங்கள் சொந்தக்கட்சியினரின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். லோக்சபாவில் குற்றவியல் வழக்கு பின்னணி கொண்ட பல, பா.ஜ., - எம்.பி.,க்கள் உள்ளனர்.

பா.ஜ., ஆளும் பீஹார் மாநிலத்தின் முதல்வர் சாம்ராட் சவுத்ரி மீது ஏழு கொலை வழக்குகள் உள்ளன. எனவே, அமைச்சர் நாகேந்திராவை விமர்சிக்க, பா.ஜ.,வினருக்கு தகுதியில்லை.

பா.ஜ.,வில் பெண் தலைவர்கள் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இதுவரை, 5 பெண் தலைவர்கள் இருந்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், 52 ஆண்டுகளாக தேசிய கொடி ஏற்றப்படவில்லை. எனவே, பா.ஜ.,வினர் தேசப்பற்று, குற்ற வழக்குகள் பற்றியெல்லாம் பேசக்கூடாது. அவர்களுக்கு அதற்கான தகுதியுமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us