sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நேபாளத்தில் 39 கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

நேபாளத்தில் 39 கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

நேபாளத்தில் 39 கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்


ADDED : செப் 11, 2025 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 07:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : நேபாளத்தில் சிக்கி உள்ள கன்னடர்கள் 39 பேர் பாதுகாப்பாக இருப்பதாக, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததால், அந்நாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டு உள்ளது. விமான சேவை முடங்கி உள்ளது. கர்நாடகாவில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுா சென்றவர்கள், காத்மாண்டில் சிக்கி தவிக்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ''நேபாளத்தில் நடக்கும் கலவரத்தால், கன்னடர்கள் 39 பேர் அங்கு சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளேன். டில்லியில் உள்ள கர்நாடக பவன் கமிஷனர், நேபாளத்தில் சிக்கியுள்ள கன்னடர்களுடன் தொடர்பில் உள்ளார்,'' என்றார்.

தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ''நேபாளத்தில் சிக்கி தவிக்கும், கன்னடர்களை மீட்டு வரும் பொறுப்பை, முதல்வர் எனக்கு வழங்கினால், அங்கு செல்ல தயார்,'' என்றார்.

இதற்கிடையில் நேபாளத்தில் சிக்கியுள்ள கன்னடர்கள் சிலர், தங்கள் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர். விமான டிக்கெட் பல மடங்கு உயர்ந்து உள்ளதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us