/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொகுதி நிதி ஒதுக்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
/
தொகுதி நிதி ஒதுக்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
தொகுதி நிதி ஒதுக்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
தொகுதி நிதி ஒதுக்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
ADDED : மார் 07, 2025 10:58 PM

பெங்களூரு: தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்க கோரி, பெங்களூரு விதான் சவுதா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன்பு, பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில் நடந்த போராட்டத்தில், தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் மாநில பா.ஜ., தலைவரும், ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வுமான விஜயேந்திரா பேசியதாவது:
டில்லிக்கு சென்று நமது வரி, நமது உரிமை என்று, முதல்வர் சித்தராமையா போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது. நீங்கள் எம்.எல்.ஏ.,க்களை நடுதெருவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்.
இந்த முறையாவது பட்ஜெட்டில் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குங்கள்.
'நிதி இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.,க்கள் தற்கொலை செய்ய வேண்டியது தான்' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே கூறியது சரி தான்.
வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் செலுத்தி விட்டோம் என்று கூறுவதையும், ஆணவத்தில் பேசுவதையும் முதல்வர் முதலில் நிறுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.