பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : ஜூலை 29, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு, : ''ராஜஸ்தானில் இருந்து, பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது, நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி தான்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி தான். இறைச்சி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அது ஆட்டிறைச்சி தான் என, அறிக்கை வந்துள்ளது.
ராஜஸ்தானில் இருந்து, இறைச்சி கொண்டு வந்து விற்பது, அவரது தொழில்.
அவர் வரவழைத்தது நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி என்பது, அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.