/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒப்பந்ததாரர்களுக்கு தொகை சதீஷ் ஜார்கிஹோளி உறுதி
/
ஒப்பந்ததாரர்களுக்கு தொகை சதீஷ் ஜார்கிஹோளி உறுதி
ADDED : மார் 06, 2025 12:34 AM

பெங்களூரு:“முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தி ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி தொகை படிப்படியாக வழங்கப்படும்,” என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
கர்நாடக மேல்சபை கேள்வி நேரத்தில், நடந்த விவாதம்:
ம.ஜ.த., - சரவணா: ஒப்பந்ததாரர்களுக்கு, நிர்ணயித்த நேரத்தில் பில் தொகையை வழங்குவதில்லை. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்படுகின்றனர். விஷம் குடிப்பதாக கூறுகின்றனர். அரசுக்கு மனிதநேயம் இருந்தால், உடனடியாக பில் தொகையை வழங்க வேண்டும்.
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி: ஒப்பந்ததாரர்களுக்கு மொத்தம் 9,000 கோடி ரூபாய் பாக்கி வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பில் தொகையை வழங்கும்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையை வழங்க முடியாது. முதல்வருடன் கலந்தாலோசித்து, பாக்கி தொகையை படிப்படியாக வழங்குவோம். இது குறித்து ஏற்கனவே, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். முந்தைய ஆட்சியில், அதிகமான பில் தொகை பாக்கி வைத்துள்ளதால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. எங்கள் அரசு கொஞ்சம் கொஞ்சமாக பாக்கி தொகையை வழங்கும்.