தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் 4 பயணியருக்கு ஒரே டிக்கெட்

கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் 4 பயணியருக்கு ஒரே டிக்கெட்

கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் 4 பயணியருக்கு ஒரே டிக்கெட்


UPDATED : அக் 12, 2026 12:00 AM

ADDED : அக் 11, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:00 AM ADDED : அக் 11, 2026 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் பற்றாக்குறையை தொடர்ந்து, தற்போது டிக்கெட் ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான்கு பயணியருக்கு ஒரே டிக்கெட் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்து கழகங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. பெட்ரோலிய நிறுவனங்களுக்கு டீசல் தொகை பாக்கி வைத்துள்ளனர். இதனால் டீசல் விநியோகிப்பதை, பெட்ரோலிய நிறுவனங்கள் நிறுத்தியதால் கொப்பால், விஜயபுராவில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பஸ்களின் பயண டிக்கெட் அச்சடிக்கும் காகித ரோல்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘சக்தி’ திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய தொகை வழங்கப்படுவது தாமதமாகிறது.

இதன் விளைவாக, டீசல் வினியோகிக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பாக்கி வைத்துள்ளதை போன்று, பயணியருக்கு டிக்கெட் வழங்கும் இ.டி.எம்., இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் காகிதங்களை வினியோகிப்போருக்கும், பில் தொகை பாக்கி வைத்துள்ளதால், டிக்கெட் ரோல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் ரோல்கள் காலியாவதால், நடத்துநர்கள் ஒரே பஸ் நிலையத்திற்கு செல்லும் பயணியர், ஒரே குடும்பத்தின் மூன்று, நான்கு பயணியருக்கு ஒரே டிக்கெட் கொடுத்து, சூழ்நிலையை சமாளிக்கின்றனர்.

குறிப்பாக பீதரில் இருந்து கலபுரகி உட்பட பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பஸ்களில் இந்த பிரச்னை அதிகம். சில இடங்களில் சக நடத்துநர்களிடம் டிக்கெட் ரோல்களை இரவல் வாங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us