/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் 10 ஏக்கர் வாங்கிய டி.வி.எஸ்.,
/
பெங்களூரில் 10 ஏக்கர் வாங்கிய டி.வி.எஸ்.,
ADDED : பிப் 25, 2025 10:38 PM
பெங்களூரு: தமிழகத்தைச் சேர்ந்த, 'டி.வி.எஸ்., எமரால்டு' கட்டுமான நிறுவனம், பெங்களூரில் 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. சதனுார் பகுதியில் உள்ள இந்த நிலக் கொள்முதல், இந்த ஆண்டில் நான்காவது பெரிய கொள்முதல் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் அய்யர் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னையில் ரேடியல் சாலை மற்றும் ஓ.எம்.ஆரின் படூர், பெங்களூரின் தனிச்சந்திரா ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது, சதனுாரில் வாங்கியுள்ள நிலத்தையும் சேர்த்து, நிறுவனத்துக்கு மொத்தமாக 5,300 கோடி ரூபாய் வருவாய் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டி.வி.எஸ்., எமரால்டு நிறுவனத்தின் கட்டுமானத்தின் கீழ், மொத்தம் 82 லட்சம் சதுர அடி நிலம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெங்களூரில் வாங்கிய நிலத்தின் மதிப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.