/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்கார வழக்கு கைதானவருக்கு '10 ஆண்டு'
/
சிறுமி பலாத்கார வழக்கு கைதானவருக்கு '10 ஆண்டு'
ADDED : ஜூலை 31, 2025 10:57 PM
மங்களூரு: சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, புத்துார் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கதக் மாவட்டம், ரோணா தாலுகாவின், தின்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பீரேஷ் யானே மல்லோத்ரா, 35.
இவர் தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரின், கனகானுர் கிராமத்தில் செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றினார். இங்கு வாடகை வீட்டில் வசித்தார்.
இதே கிராமத்தில் வசிக்கும், 17 வயது சிறுமியை அறிமுகம் செய்து கொண்டு, நட்பாக பேசிப் பழகினார். 2017ல், நயமாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பலாத்காரம் செய்தார். அதன்பின் மிரட்டி, பல முறை சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்தார்.
இதனால் கருவுற்றதால், பீதியடைந்த சிறுமி, நடந்ததை பெற்றோரிடம் கூறினார். பெற்றோரும் சம்ப்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
'போக்சோ' சட்டத்தின் கீழ் பீரேஷை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, புத்துாரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 35,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.
அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது.