/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்
/
101 மொபைல் போன்கள் கைதிகளிடம் பறிமுதல்
ADDED : டிச 22, 2025 06:04 AM
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளிடமிருந்து 101 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கைதிகள் உள்ள இடங்களில் சிறை தலைமை கண்காணிப்பாளர் அன்ஷு குமார், கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 16 முதல் 18ம் தேதி வரை நடந்த சோதனையில், 101 மொபைல் போன்கள், 23 சார்ஜர்கள், 84 சிம் கார்டுகள், 16 இயர்போன்கள், 18 கத்திகள், 64,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் தெரிவித்து உள்ளார்.

