தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அரசு நடத்திய சமரச பேச்சில் உடன்பட்டு, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மாநிலத்தில், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தங்களுக்கு, பணி மூப்பின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம், மாதந்தோறும் 7 ம் தேதிக்குள் ஊதியம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக, அரசுடன் பேசி வருகின்றனர்.

இதில், முடிவுகள் ஏதும் எடுக்கப்படாத நிலையில், நேற்று இரவு 10:00 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையில், நேற்று சுகாதார துறை தலைமை செயலர், அவர்களுடன் பேச்சு நடத்தினார்.

பின், துறை அமைச்சர் காதர் அளித்த பேட்டி:

தற்போது சில இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைய 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இது கவலை அளிக்கிறது. ஆம்புலன்ஸ் அமைப்பை மேம்படுத்த ஒப்பந்த விபரங்கள், கொள்கைகளையும் தயாரித்து வருகிறது. அவற்றை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

குறைகள் சரி செய்யப்படும் வரை, 108 சேவையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். தேவைப்படும்போது, அரசு மருத்துவ மனைகளுக்கு சொந்தமான 1,000 ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தலாம்.

தற்போதுள்ள அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய, அரசு பணியாற்றி வருவதால், அரசு ஆம்புலன்ஸ்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

முன் நான்கு மாவட்டங்களில் மட்டுமே சேவையாற்றி வந்த, 108 ஆம்புலன்ஸ் சேவை, 735 வாகனங்களுடன் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 400 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே செயல்படுகின்றன. அரசு எந்த மிரட்டலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ அடிபணியாது. இந்த அமைப்பை புனரமைக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் குழுவினர், 'ஜி.வி.,' என்ற சேவை வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர். சேவை தொடர்பான குறைபாடுகளுக்கு அந்நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

அரசு திருத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பை சீரமைக்க, இரண்டு மாதங்கள் தேவைப்படும். அவசர அழைப்புகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்ய இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us