டிராலி பேக்கில் கடத்தப்பட்ட 108 நட்சத்திர ஆமைகள் மீட்பு
டிராலி பேக்கில் கடத்தப்பட்ட 108 நட்சத்திர ஆமைகள் மீட்பு
ADDED : செப் 08, 2026 10:03 PM

காந்தி நகர்: டிராலி பேக்கில் 108 நட்சத்திர ஆமையை கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு காந்தி நகரில், நபர் ஒருவர் நட்சத்திர ஆமைகளை கடத்தி செல்வதாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு வந்த தகவலால், குறிப்பிட்ட இடத்தில் அதிகாரிகள் காத்திருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர், தனது டிராலி பேக்குடன் வந்தார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தினர். அவரின் உடமைகளை பரிசோதித்த போது, ஆறு துணி உறைகளில், 108 உயிருள்ள நட்சத்திர ஆமைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆமைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
விசாரித்தபோது, கலாசிபாளையாவில் சிலர், 'மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தனக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர்' என்றார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஆமைகள் எங்கிருந்து வந்தன என விசாரிக்கின்றனர்.
