/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை
/
10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை
ADDED : ஜன 13, 2026 05:03 AM

துமகூரு: பள்ளிக்கு சென்ற, 14 வயது சிறுவன், கிணற்றில் பிணமாக கிடந்தான். அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
துமகூரு மாவட்டம் சிக்கநாயகனஹள்ளியின் குட்லு சென்னகட்டயாவை சேர்ந்தவர் ஜெகதீஷ், 14. கென்கெரே அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை எடுத்து கொண்டு, பாட்டி வீட்டில் தங்கியிருந்தான். பின், கடந்த 10ம் தேதி வீட்டுக்கு திரும்பினான்.
அப்போது அவரது தந்தை ரமேஷ், மகனை பள்ளிக்கு அனுப்பி, 'இனி பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் ஒழுங்காகபடி' என்று அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.
அன்று பள்ளிக்கு சென்ற ஜெகதீஷ், மாலை நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தான். கொல்லரஹட்டி அருகே வரும் போது, தனது நண்பர்களை வீட்டுக்கு செல்லும்படி கூறி விட்டு, பின்னர் வருவதாக தெரிவித்துள்ளான்.
நண்பர்களும் சென்று விட்டனர். பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிய பின், கொல்லரஹட்டியில் கிணறு ஒன்றின் அருகில் ஜெகதீசின் புத்தகம் மற்றும் செருப்புகள் கிடந்தன. கிணற்றில் ஜெகதீஷ் பிணமாக மிதந்தான். அவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ஹுலியாரு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

