/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நெரிசலில் பலி 11; ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கே.எஸ்.சி.ஏ., முழு பொறுப்பு; 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.ஐ.டி., தயார்
/
நெரிசலில் பலி 11; ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கே.எஸ்.சி.ஏ., முழு பொறுப்பு; 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.ஐ.டி., தயார்
நெரிசலில் பலி 11; ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கே.எஸ்.சி.ஏ., முழு பொறுப்பு; 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.ஐ.டி., தயார்
நெரிசலில் பலி 11; ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கே.எஸ்.சி.ஏ., முழு பொறுப்பு; 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.ஐ.டி., தயார்
ADDED : நவ 20, 2025 03:33 AM

பெங்களூரு: பெங்களூரு ஆர்.சி.பி., கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.
'சம்பவத்திற்கு, ஆர்.சி.பி., - டி.என்.ஏ., ஈவென்ட் மேனேஜ்மென்ட் - கே.எஸ்.சி.ஏ., ஆகிய மூன்று நிறுவனங்களே முழு பொறுப்பு' என, 2,200 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல்., டி 20 கிரிக்கெட் போட்டியின் 18 ஆண்டுகால வரலாற்றில், ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன்முறையாக இந்த ஆண்டு கோப்பையை வென்றது. இதை கொண்டாடும் வகையில் மறுநாள், பெங்களூரில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரர்களை பார்க்க, பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் திரண்டனர். சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூடியதால், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆதாரங்கள், நேரில் கண்ட நுாற்றுக்கணக்கான சாட்சிகள், கண்காணிப்பு கேமரா, காயமடைந்தவர்களின் விளக்கம், போலீசார் வழங்கிய தகவல்களை சி.ஐ.டி., போலீசார் சேகரித்தனர்.
கூட்ட நெரிசலில் 11 பே ர் பலியானதற்கு, ஆர்.சி.பி., - கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டி.என்.ஏ., ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகியவை தான் நேரடி பொறுப்பு என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குற்றப்பத்திரிகையில் சி.ஐ.டி., முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் சில:
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய சரியான திட்டமிடல் இல்லை
பாராட்டு விழா நடத்துவது தொ டர்பாக முறையாக ஆலோசிக்கவில்லை
நிகழ்ச்சி நடத்த எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போலீசாருக்கு சரியான தகவல்கள் வழங்கவில்லை
டிக்கெட் விற்பனை, ஆன்லைன் தகவல்கள், தவறான வதந்திகள், எத்தனை பேர் பங்கேற்பர் என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது
டிக்கெட் குழப்பமே இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம்
நிகழ்ச்சியை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான திட்டமிடல், டி.என்.ஏ., ஈவென்ட் மேனேஜ்மென்டிடம் இல்லை
தனியார் பாதுகாப்பு பணியாளர்களை திறம்பட பயன்படுத்தவில்லை
போலீசாருக்கு போதுமான தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, அணி திரட்டுவதில் குளறுபடி.
விசாரணையின் அடிப்படையில், குற்றப்பத்திரிகையில், இச்சம்பவம் நடந்த நாளில் மைதானத்தின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, விசாரணை குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்களின் வாக் குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் இறப்புக்கு ஆர்.சி.பி., - கே.எஸ்.சி.ஏ., - டி.என்.ஏ.,வே நேரடி பொறுப்பு. இந்த பொறுப்பில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.
விசாரணையை முடித்த சி.ஐ.டி., போலீசார், 2,200 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். விரைவில் இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், வழக்கு விசாரணை வேகமெடுக்கும்.

