/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து 11 மாத பெண் குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து 11 மாத பெண் குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து 11 மாத பெண் குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து 11 மாத பெண் குழந்தை பலி
ADDED : அக் 21, 2025 04:14 AM

ராம்நகர்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 11 மாத பெண் குழந்தை இறந்தது.
ராம்நகரின் சென்னப்பட்டணா டவுன் ஜீவன்பூரில் வசிப்பவர் ஷம்ஷாத் பதான். இவரது மனைவி முஸ்கன். இந்த தம்பதியின் 11 மாத பெண் குழந்தை குஷி.
நேற்று காலையில், வீட்டின் முன் குஷி விளையாடி கொண்டு இருந்தார். வீட்டிற்குள் இருந்த தாய் வெளியே வந்து பார்த்த போது, குஷியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
சிறிது நேரத்தில் வீட்டின் அருகே உள்ள, தண்ணீர் இல்லாத தொட்டியில் காயத்துடன் குஷி மீட்கப்பட்டார். ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தண்ணீர் தொட்டியில் விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.