/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் நிகழ்ச்சியில் 11 பெண்கள் மயக் க ம்
/
முதல்வர் நிகழ்ச்சியில் 11 பெண்கள் மயக் க ம்
ADDED : அக் 21, 2025 04:24 AM
மங்களூரு: தட்சிண கன்னடாவின் புத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ராய். தீபாவளியை ஒட்டி, தன் தொகுதி மக்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சியை, புத்துார் தாலுகா மைதானத்தில் நேற்று மாலை நடத்தினார். இதில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
பரிசு பொருட்கள் வாங்க, நேற்று மதியத்தில் இருந்தே பெண்கள் குவிந்தனர். மைதானத்தில் 20,000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையில், அதையும் தாண்டி மக்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு முதல்வர் வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பெண்கள் மூச்சுத்திணறி மயக்கம் போட்டு விழுந்தனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம், புத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மயக்கம் போட்டவர்கள், புத்துாரின் யோகிதா, 20, சபதா, 20, அமினா, 56, நேத்ராவதி, 37, லீலாவதி, 50, வசந்தி, 53, குஸ்மா, 62, ரத்னாவதி, 67, அபிலா, 20, சிநேகபிரபா, 41, ஜசிலா, 37 ஆகியோர் என்பது தெரிந்தது.