/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி., பஸ்சில் 124 லிட்டர் டீசல் திருட்டு
/
பி.எம்.டி.சி., பஸ்சில் 124 லிட்டர் டீசல் திருட்டு
பி.எம்.டி.சி., பஸ்சில் 124 லிட்டர் டீசல் திருட்டு
பி.எம்.டி.சி., பஸ்சில் 124 லிட்டர் டீசல் திருட்டு
ADDED : டிச 09, 2025 06:31 AM
பெங்களூரு: பெட்ரோல் பங்க் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, பி.எம்.டி.சி., பஸ்சில் இருந்து 124 லிட்டர் டீசலை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
இது குறித்து, பி.எம்.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு புறநகரில் உள்ள ராம்புராவில் இருந்து கே.ஆர்.மார்க்கெட்டுக்கு 367/1 எண் உள்ள பி.எம்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது. இதில் ஓட்டுநர் சிவப்பா, நடத்துநர் மஞ்சுநாத் பணி செய்கின்றனர்.
டிசம்பர் 2ம் தேதி, கடைசி டிரிப்பை முடித்து கொண்டு, ராம்புராவின் பெட்ரோல் பங்க் வளாகத்தில், பஸ்சை நிறுத்தினர். இரவு உணவை முடித்து கொண்ட ஓட்டுநரும், நடத்துநரும் பஸ்சில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு 11:00 மணிக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பங்க்கை மூடிவிட்டு பக்கத்தில் உள்ள அறையில் படுத்துறங்கினர்.
அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, தயாராகி 5:00 மணிக்கு பஸ்சை எடுத்து கொண்டு, ராம்புராவில் இருந்து புறப்பட்டனர். ஹலசூரு அருகில் செல்லும் போது, டீசல் காலியாகி பஸ் நின்றுவிட்டது. இது குறித்து, பி.எம்.டி.சி., டிப்போவில் விசாரித்த போது, பஸ்சில் 124 லிட்டருக்கும் அதிகமான டீசல் இருந்தது தெரிய வந்தது.
சந்தேகமடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு, ராம்புரா பெட்ரோல் பங்க் சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அதிகாலை 2:00 மணியளவில், டாடா இன்டிகா காரில் வந்த மர்ம நபர்கள், பி.எம்.டி.சி., பஸ்சின் டீசல் டேங்க் மூடியை உடைத்து, பைப் பயன்படுத்தி 124 லிட்டர் பெட்ரோலை கேன்களில் நிரப்பி திருடி சென்றது தெரிய வந்தது. 11,000 ரூபாய் மதிப்புள்ள டீசல் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.இனி விழிப்புடன் இருக்கும்படி, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

