/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டு தபால் தலைகள் சேகரிப்பில் 13 வயது சிறுவன்
/
வெளிநாட்டு தபால் தலைகள் சேகரிப்பில் 13 வயது சிறுவன்
வெளிநாட்டு தபால் தலைகள் சேகரிப்பில் 13 வயது சிறுவன்
வெளிநாட்டு தபால் தலைகள் சேகரிப்பில் 13 வயது சிறுவன்
ADDED : டிச 07, 2025 05:35 AM

- நமது நிருபர் -
பழங்கால நாணயம், தபால் தலைகளை சேகரித்து வைப்பதை சிலர் பொக்கிஷமாக பார்க்கின்றனர். 80, 90 கிட்ஸ்கள் என்று அழைக்கப்படுவோருக்கு பழசுகளை சேர்ப்பதில் அலாதி பிரியம் உள்ளது. ஆனால் தற்போதைய 2கே கிட்ஸ்களுக்கு பழங்கால பொருட்களை சேகரிப்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனாலும் ஒரு சில கிட்ஸ்கள் பழசுகள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் ஒருவர், 13 வயது சிறுவன் நந்தகிஷோர்.
கர்நாடகாவில் வெண்ணெய்க்கு பெயர் எடுத்த தாவணகெரேயின் டாலர்ஸ் காலனியில் வசிக்கும் சதீஷ் பாபு, பிரதீபாவின் மகன் நந்தகிஷோர். ஏழாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் பழங்கால நாணயங்கள், விண்வெளி தொடர்பான முத்திரைகள், வெளிநாட்டு தபால் தலைகளை சேகரிப்பதில் அதிக ஆர்வம் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நாடுகளின் அஞ்சல் அட்டைகள், 130 நாடுகளின் 2,000 க்கும் மேற்பட்ட முத்திரைகளை சேகரித்து வைத்து உள்ளார். 2024 - 2025 ம் ஆண்டுக்கான இந்திய அஞ்சல் துறையால் நடத்தப்பட்ட, தீன் தயாள் ஸ்பர்ஷா யோஜனா உதவி தொகை பெறும் திட்டத்திற்கும் தேர்வானார். ஏர்மெயில் சொசைட்டி ஆப் இந்தியா தபால் தலை கண்காட்சியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார்.
இதுகுறித்து நந்தகிஷோர் கூறியதாவது:
எனது தந்தை சதீஷ் பாபுவுக்கு பழங்கால நாணயங்கள் சேகரிக்கிறார். அவரிடம் இருந்து எனக்கும் ஆர்வம் தொற்றி கொண்டது. வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகளை சேகரித்து வருகிறேன். பெங்களூரில் உள்ள பழங்கால முத்திரைகள் சேமிப்பு சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன்.
அந்த சங்கத்தில் இளையவர் நான் தான். சங்கம், தந்தையின் உதவியுடன் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் தபால் தலைகளை சேகரித்து உள்ளேன். இன்னும் சில நாடுகளில் நாணயங்கள், முத்திரைகளை சேகரிக்க வேண்டி உள்ளது; விரைவில் அதை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

