ADDED : மார் 31, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
மைசூரு: இறைச்சிக்காக கடத்தப்பட்ட, 15 மாடுகள் மீட்கப்பட்டன.
மைசூரு தாலுகா ஹொசஹுண்டி கிராமத்தில், போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தினர். உள்ளே பார்த்த போது, துணியால் வாய் கட்டப்பட்ட நிலையில், 15 மாடுகள் இருந்தன.
சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த, மைசூரு டவுன் கவுசியா நகரின் ஜமீர், 36 என்பவரிடம் விசாரித்த போது, நஞ்சன்கூடு சந்தையில் இருந்து, இறைச்சிக்காக மாடுகளை விலைக்கு வாங்கி கடத்தியது தெரியவந்தது.
மாடுகளை மீட்ட போலீசார் கோசாலைக்கு அனுப்பினர். ஜமீர் கைது செய்யப்பட்டார்.
