தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ்களில் குட்கா விளம்பரம் அகற்றுவதற்கு 15 நாட்கள் கெடு

 அரசு பஸ்களில் குட்கா விளம்பரம் அகற்றுவதற்கு 15 நாட்கள் கெடு

 அரசு பஸ்களில் குட்கா விளம்பரம் அகற்றுவதற்கு 15 நாட்கள் கெடு


ADDED : பிப் 09, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசு பஸ்களில் இடம்பெற்றுள்ள குட்கா, புகையிலை விளம்பரங்களை அகற்றுவதற்கு 15 நாட்கள் கெடு விதித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.

கர் நாடகாவில் அரசு பஸ்களில் புகையிலை, குட்கா விளம்பரங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலம் முழுதும் பல இடங்களில் பஸ்களில் இடம்பெற்றிருந்த விளம்பரங்களை அகற்றினர். புகையிலை பொருட்கள் ப யன்பாட்டை மாநில அரசு ஊக்கப்படுத்துகிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் தீவிரத்தை புரிந்து கொண்ட போக்குரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, 'அரசு பஸ்களில் இடம்பெற்றுள்ள குட்கா, புகையிலை விளம்பரங்கள் நீக்கப்பட வேண்டும்' என சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த உத்தரவில் விளம்பரங்களை அகற்றுவதற்கான கால நிர்ணயம் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பஸ் நிலையங்கள், பஸ்களில் இடம்பெற்றுள்ள குட்கா, புகையிலை தொடர்பான விளம்பரங்கள் அடுத்த 15 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும். அதேசமயம், சிலர் பஸ்களில் இடம்பெற்றுள்ள பொதுவான விளம்பரங்களை அகற்றி வருகின்றனர். இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் விதிமுறைகளின்படி, மாநகராட்சி பஸ்களில் விளம்பரங்கள் இடம்பெற அனுமதி உண்டு. இதை அனைவரும் ஞாபகம் வைத்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us