sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 1,500 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள்

விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 1,500 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள்

விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 1,500 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள்


ADDED : ஆக 23, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 06:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் 26, 27ம் தேதிகளில், கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் 26, 27ம் தேதிகளில் பெங்களூரில் இருந்தும்; 27, 31ம் தேதிகளில் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் பெங்களூருக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்படும்.

 பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமண்யா, ஷிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாத்கிர், பீதர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்

 சிறப்பு பஸ்கள் மைசூரு சாலை பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, ஹூன்சூர், பிரியா பட்டணா, விராஜ்பேட், குஷால் நகர், மடிகேரிக்கு இயக்கப்படும்

 பிரிமீயர் சிறப்பு பஸ்கள், சாந்த நகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், சென்னை, கோயம்புத்துார், திருச்சி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட தமிழகம், கேரளாவின் மற்ற இடங்களுக்கு இயக்கப்படும்

 சிறப்பு பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்யும் பயணியர், டிக்கெட்டில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சில் ஏற வேண்டும்

 www.ksrtc.karnataka.gov.in என்ற இணைய முகவரியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்

 கர்நாடகா மற்றும் மற்ற மாநிலங்களின் பஸ் நிலையங்களில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. அங்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

 ஒரே நேரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பஸ்சில் செல்வோருக்கு 5 சதவீதமும்; மறு மார்க்கத்துக்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், 10 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி

 அதுபோன்று அனைத்து மாவட்டம், தாலுகா பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us