/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மங்களூரு விமான விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம்
/
மங்களூரு விமான விபத்து 15ம் ஆண்டு நினைவு தினம்
ADDED : மே 22, 2025 11:15 PM

தட்சணி கன்னடா: மங்களூரில் விமான விபத்தில் உயிரிழந்தோரின் 15ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு, 2010 மே 22ம் தேதி, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளானது.
இதில், பயணித்த தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, கேரளாவின் காசர்கோடை சேர்ந்த 158 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள், குலுாரில் உள்ள பல்குனி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டன. இதன் நினைவாக, தன்னிர்பாவியில் நினைவு சின்னம் கட்டப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்தாண்டும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கலெக்டர் ஆனந்த், மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திர நாயக், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், விமான நிலைய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் ஆனந்த் கூறுகையில், ''இவ்விபத்தில் பலியான 158 பேரில், 12 பேர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள் குலுார் அருகில் அடக்கம் செய்யப்பட்டன,'' என்றார்.