தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 16 பைக் திருட்டு: மெக்கானிக் கைது

 16 பைக் திருட்டு: மெக்கானிக் கைது

 16 பைக் திருட்டு: மெக்கானிக் கைது


ADDED : செப் 05, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 03:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: பைக் திருட்டில் ஈடுபட்ட மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 12 லட்சம் மதிப்புள்ள, 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்லாரியை சேர்ந்தவர் இம்ரான்கான், 20, மெக்கானிக். இவர், கொப்பால் மாவட்டத்தில் மெக்கானிக் கடை வைத்திருந்தார். அதிகபணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பைக்குகளை திருட துவங்கினார். திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். இதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து உல்லாசமாக செலவு செய்தார்.

இதற்கிடையே, கொப்பால் அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு வழக்கு குறித்து, கடந்த வாரம் மாவட்ட போலீசார் விசாரணையை துவங்கினர்.

மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இம்ரான் தான் கண்டறியப்பட்டார். இதையடுத்து, கொப்பால் மருத்துவமனை அருகே தங்கியிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us