திரவுபதி அம்மன் கோவிலில் 16 அடி முருகன் சிலை பிரதிஷ்டை
திரவுபதி அம்மன் கோவிலில் 16 அடி முருகன் சிலை பிரதிஷ்டை
ADDED : ஆக 05, 2026 01:37 AM

சுதந்திர நகர்: சுதந்திர நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன், 16 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதந்திர நகரில் - வி.ஆர்.நாயுடு நகர் - அமைந்து உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், 32 அடி உயர ராஜகோபுரம் உள்ளது. இக்கோவிலில், அக்னி குண்ட கரகத்திருவிழா பிரசத்தி பெற்றதாகும்.
இக்கோவிலில், திரவுபதி அம்மன், தர்மராஜா, வள்ளி - தெய்வானையுடன் முருகன், கிருஷ்ணர், விநாயகர் விக்ரஹங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், 16.3 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன் தினம் நடந்தது. இந்த, வெற்றி வேல் முருகன் சிலை திறப்பின் போது பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.
இச்சிலையை, பண்ருட்டியை சேர்ந்த குமார், வினோத், பிஜுபாய் வடிவமைத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, வேலு, குமார், குமாரவேலு, ரவிகுமார், குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
