/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்வதேச மல்யுத்த போட்டி தயாராகும் 19 வயது வீரர்
/
சர்வதேச மல்யுத்த போட்டி தயாராகும் 19 வயது வீரர்
ADDED : டிச 05, 2025 08:59 AM

பெலகாவியில் கடந்த அக்டோபர் 23ம் தேதி, மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதில், தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். இதில், கர்நாடகாவின் சார்பாக ஹூப்பள்ளி மாவட்டம், உன்கல் கிராமத்தை சேர்ந்த விக்ரம், 61 கிலோ எடை பிரிவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இவரது பிரிவில் 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் போட்டியிட்டனர்.
இந்த கடும் போட்டியில் விக்ரம், வெள்ளி பதக்கம் வாங்கி அசத்தினார். இது, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. இவர், ஒவ்வொரு போட்டியிலும் கையாண்ட வித்தைகள், பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. இதனால், உஸ்பெகிஸ்தானில் நடக்கும் சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஹூப்பள்ளியில் உள்ள அரசு பி.யு., கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கும் விக்ரமுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர்களது குடும்பமே மல்யுத்தத்திற்கு பெயர் போனது.
விக்ரம் கூறியதாவது:
எனது குடும்பத்தில் அனைவரும் மல்யுத்த வீரர்களே. சர்வதேச மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக, கடின பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பயிற்சி அளிக்கின்றனர். என் தந்தை மஞ்சுநாத் தினமும் பயிற்சிகள் கொடுத்து வருகிறார்.
இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெறுவேன். தேசத்தின் பெயரை காப்பாற்றுவேன். இந்தியா பெயர் கொண்ட ஜெர்கினை அணிந்து விளையாடுவது என் வாழ்நாள் கனவு.
இது உண்மையில் அரங்கேறி விட்டது. வெற்றி நிச்சயம். இதற்காக, எவ்வளவு கடினமான பயிற்சிகளிலும் ஈடுபட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

