/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்.,கில் 2 படுக்கை அறை வீட்டின் விலை ரூ.1 கோடி
/
பெங்.,கில் 2 படுக்கை அறை வீட்டின் விலை ரூ.1 கோடி
பெங்.,கில் 2 படுக்கை அறை வீட்டின் விலை ரூ.1 கோடி
பெங்.,கில் 2 படுக்கை அறை வீட்டின் விலை ரூ.1 கோடி
ADDED : நவ 15, 2025 08:03 AM
பெங்களூரு: 'பெங்களூரில் இரண்டு படுக்கை அறை கொண்ட, ஒரு வீட்டின் விலை ஒரு கோடி ரூபாய்' என, ரெட்டிட் தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ரெட்டிட் சமூக வலைத்தளத்தில், இந்தியன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கணக்கு வைத்திருப்பவர் பதிவு:
நான் பெங்களூரில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறேன். இங்குள்ள ரியல் எஸ்டேட் சூழ்நிலையை பார்த்து சலிப்படைந்து விட்டேன். எங்கு பார்த்தாலும் வீடுகள் விலை அதிகமாக உள்ளது.
ஒயிட்பீல்டு, சர்ஜாபூர், எலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. கொரோனா பரவலுக்கு பின், வாடகையும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு இன்னும் வேகமாக வளருகிறது. நகரில் ஐ.டி., வேலைகள் அதிகமாக உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் சமீபத்தில் வீடு வாங்கியவர்களிடம் உங்கள் முடிவில் திருப்தியாக உள்ளீர்களா என்று கேட்க ஆவலாக உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

