தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மயக்க பிரட் கொடுத்து 2 பசுக்கள் கடத்தல்

மயக்க பிரட் கொடுத்து 2 பசுக்கள் கடத்தல்

மயக்க பிரட் கொடுத்து 2 பசுக்கள் கடத்தல்


ADDED : ஆக 14, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரெ தாலுகாவின், பனகல் கிராமத்தில், வீடு ஒன்றின் முன்பாக கொட்டகையில் இரண்டு பசுமாடுகள் கட்டப் பட்டிருந்தன.

நேற்று அதிகாலை 3:00 மணியளவில், காரில் வந்த மர்ம நபர்கள் பசு மாடுகளை கண்டு, காரை நிறுத்தினர்.

பிரட்டில் மயக்க மருந்து கலந்து, பசுக்களை சாப்பிட வைத்தனர். அவை லேசாக மயக்க நிலைக்கு சென்றதும், காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. பசுக்களின் உரிமையாளர் பனகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us