/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி வேன் டயரில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி
/
பள்ளி வேன் டயரில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி
ADDED : பிப் 12, 2026 05:44 AM
தனிசந்திரா: யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகனகவுடா; பெங்களூரு நகர ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். தனிசந்திரா போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று காலை, 7:00 மணிக்கு தன் மகள் வர்ஷா, 2, அண்ணன் மகள் பானு, 4, ஆகியோருடன், ஸ்கூட்டரில் பால் வாங்கச் சென்றார்.
ஒரு சாலை திருப்பத்தில், பள்ளி வேன் ஒன்று வேகமாக வருவதை கண்ட நாகனகவுடா, பிரேக் போட்டு ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த வர்ஷாவும், பானுவும், வேனின் டயரில் சிக்கினர். உயிருக்கு போராடிய குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
நாகனகவுடா அளித்த புகாரில், ஹென்னுார் போக்குவரத்து போலீசார், வேன் டிரைவரை கைது செய்தனர். விபத்து காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் வைரலாகி காண்போரை பதைபதைக்க வைக்கின்றன.

