sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விபத்து இழப்பீடு தராததால் 2 அரசு பஸ்கள் பறிமுதல்

 விபத்து இழப்பீடு தராததால் 2 அரசு பஸ்கள் பறிமுதல்

 விபத்து இழப்பீடு தராததால் 2 அரசு பஸ்கள் பறிமுதல்


ADDED : பிப் 14, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹாசன்: விபத்து வழக்கில், 32 லட்சம் ரூபாய் இழப்பீடு தராததால், இரண்டு அரசு பஸ்கள் கோர்ட் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டன.

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ரேணுகாப்பா, ரவிகிரண் ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். 2023ல் நடந்த சம்பவம் குறித்து ஹாசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மொத்தம் 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதை கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் மதிக்கவில்லை. பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால், சிக்கமகளூரு பணிமனைக்கு சொந்தமான எந்த ஒரு அரசு பஸ்சையும் பறிமுதல் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நேற்று சென்னராயப்பட்டணா தாலுகா சாலையில் சென்று கொண்டிருந்த சிக்கமகளூரு பணிமனையின் இரண்டு அரசு பஸ்களை கோர்ட் ஊழியர்கள் வழிமறித்தனர். பஸ்சில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டனர்.

பஸ்சை பறிமுதல் செய்வதாக அறிவித்து, பஸ்சின் கண்ணாடி மீது கோர்ட் ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் கோர்ட் ஊழியர்களிடம் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'அரசு செய்த தவறுக்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா' என்று பயணியர் கேட்டனர்.

'எங்கள் பணியை தடுத்தீர்கள் என்றால், நீங்களும் கோர்ட்டுக்கு வர வேண்டும்' என கூறி இரண்டு பஸ்களை பறிமுதல் செய்தனர். இதனால், பயணியர் சாலையில் நின்றனர். அவர்களுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர். இரு பஸ்களும் ஹாசன் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us