ADDED : மே 29, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, ஆராய்ச்சிநகரில், ஒருவர், சாலை அருகே வீடு கட்டி வருகிறார். நேற்று காலை தொழிலாளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியே வேகமாக சென்ற கார் மோதியதில், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்த கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம், 45, கே.கருங்குளத்தை சேர்ந்த ஜெயமணி, 50, ஆகியோர் உயிரிழந்தனர்.
அபிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் இளவரசன், 42, மது போதையில் இருந்தது தெரிந்தது. தப்பியோடிய இளவரசனை, சாயல்குடி போலீசார் தேடுகின்றனர்.
