/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பரீட்சைக்கு மொபைல் போனுடன் வந்தவர் 2 ஆண்டு தேர்வு எழுத விதித்த தடை உறுதி
/
பரீட்சைக்கு மொபைல் போனுடன் வந்தவர் 2 ஆண்டு தேர்வு எழுத விதித்த தடை உறுதி
பரீட்சைக்கு மொபைல் போனுடன் வந்தவர் 2 ஆண்டு தேர்வு எழுத விதித்த தடை உறுதி
பரீட்சைக்கு மொபைல் போனுடன் வந்தவர் 2 ஆண்டு தேர்வு எழுத விதித்த தடை உறுதி
ADDED : மார் 10, 2026 05:52 AM

பெங்களூரு: கடந்தாண்டு நடந்த, 12ம் வகுப்பு தேர்வின் போது, மொபைல் போன் வைத்திருந்ததால், இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்த சி.பி.எஸ்.சி.,யின் உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சி.பி.எஸ்.சி., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் 12ம் வகுப்பு தேர்வு 2025 பிப்., 17 முதல் மார்ச், 3ம் தேதி வரை நடந்தது. தேர்வின் முதல் நாளில் உடற்கல்வி தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத ஒரு மாணவர் தாமதமாக வந்தார். காரணம் கேட்ட போது, 'தன் வீடு பெங்களூரு வடக்கு பகுதியில் இருப்பதாகவும், தேர்வு மையத்தை கண்டுபிடிக்க தாமதமானது' என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். 25 நிமிடத்துக்கு பின், அவரின் பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போன் இருப்பதை, தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியர் கண்டுபிடித்தார். உடனடியாக அந்த மொபைல் போனை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவருக்கு வேறு கேள்வித்தாள் கொடுத்து தேர்வு எழுத கூறினார்.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாடு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டும், இந்தாண்டும் தேர்வு எழுத, சி.பி.எஸ்.இ., தடை விதித்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'சி.பி.எஸ்.சி.,யின் உத்தரவு நியாயமற்றது மற்றும் தீங்கிழைக்கும் செயல். அந்த மாணவரின் மொபைல் போனில், தேர்வை பார்த்து எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை; வேறு மொபைல் போனில் இருந்து விடை வந்ததற்கான ஆதாரமும் இல்லை' என்று கூறி, சி.பி.எஸ்.சி.,யின் உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.சி., மேல்முறையீடு செய்தது. இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சி.பி.எஸ்.சி.,யின் தடை உத்தரவு சரியே' என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

