sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி 

/

 தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி 

 தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி 

 தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி 


ADDED : மார் 13, 2026 06:04 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த, இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

பெங்களூரு ரூரல் பைதரஹள்ளியில் வசிப்பவர் அன்னய்யா. இவரது மனைவி ரித்து. தம்பதியின் இரண்டு வயது மகன் சிராக். நேற்று முன்தினம் வீட்டின் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை, அன்னய்யா வெளியே எடுத்து விட்டார். காரை கழுவுவதற்காக தண்ணீர் தொட்டி மூடியை திறந்து வைத்து விட்டு, வீட்டிற்குள் சென்றார்.

அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த சிராக், வீட்டின் முன் விளையாடினான். எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தான். அன்னய்யாவும், ரித்துவும் வெளியே வந்து பார்த்த போது, மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் தேடினர். தண்ணீர் தொட்டியை பார்த்த போது, சிராக் உடல் மிதந்தை கண்டு கதறி அழுதனர். குழந்தை உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us