/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறை கைதிக்கு கஞ்சா 2 வாலிபர்கள் கைது
/
சிறை கைதிக்கு கஞ்சா 2 வாலிபர்கள் கைது
ADDED : அக் 12, 2025 10:14 PM
ஷிவமொக்கா : பிஸ்கட் பாக்கெட்டில், கஞ்சா மறைத்து கைதிக்கு கொடுக்க முயற்சித்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்ற வழக்கில் கைதான முகமது கவுஸ் என்ற ஜங்க்லி என்பவர், ஷிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் மாலையில், ராஹில், 19, தசிருல்லா, 19, ஆகியோர் சிறைக்கு வந்தனர். இவர்கள் ஷிவமொக்காவின், பத்ராவதியை சேர்ந்தவர்கள்.
சிறை விதிமுறைப்படி, ஆதார் கார்டு காட்டிவிட்டு, கைதி முகமது கவுசுக்கு பிஸ்கட் பாக்கெட் கொண்டு செல்வதாக கூறினர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறை ஊழியர்கள் சோதனை செய்தனர். பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் கறுப்பு டேப்பில் சுற்றப்பட்ட மூன்று பொருட்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்த போது, ஒரு கஞ்சா பாக்கெட்டும், இரண்டு சிகரெட் பாக்கெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய போலீசார், ராஹிலையும், தசிருல்லாவையும் கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.