/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பன்னரகட்டா பூங்காவில் 20 சதவீதம் கட்டணம் உயர்வு
/
பன்னரகட்டா பூங்காவில் 20 சதவீதம் கட்டணம் உயர்வு
ADDED : ஜூலை 11, 2025 11:04 PM
பெங்களூரு: பன்னரகட்டா உயிரியல் பூங்கா, மைசூரு ஸ்ரீ சாமராஜேந்திரா வன விலங்கு சரணாலயத்தின் டிக்கெட் விலை 20 சதவீதம் வரை உயர்த்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அனுமதி அளித்துள்ளார்.
கர்நாடக உயிரியல் பூங்கா ஆணைய கூட்டம், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கலந்து கொண்டார். பன்னரகட்டா உயிரியல் பூங்கா, மைசூரு ஸ்ரீ சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலையில் பறவைகள், விலங்குகளுக்கு உணவு அளிக்கும் செலவுகள் அதிகரித்துள்ளன. ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணிகளால் நுழைவு கட்டணத்தை 50 சதவீதம் அதிகரிக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதை கேட்ட அமைச்சர், சுற்றுலா பயணியரின் நலனை கருத்தில் கொண்டு 50 சதவீத கட்டண உயர்வுக்கு மறுத்துவிட்டார். 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தார். இந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என, அமைச்சர் தெரிவித்தார்.