/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜன 02, 2026 06:07 AM
கொப்பால்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கொப்பால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொப்பால் நகரை சேர்ந்தவர் முகமது சோயிப், 25. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியில் வசிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக நாடகமாடினார். அவருடன் நெருங்கி பழகி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பிணியானதால் அவரை கடத்திச் சென்றார்.
இதுதொடர்பாக, சிறுமியின் தாய் கொப்பால் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது சோயிபை கைது செய்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையை முடித்து, கொப்பால் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் மற்றும் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், முகமது சோயிபுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி குமார் தீர்ப்பளித்தார்.

