/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு 24 கட்டடங்கள் அகற்றம்
/
ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு 24 கட்டடங்கள் அகற்றம்
ADDED : நவ 01, 2025 04:26 AM

பெங்களூரு: ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் உட்பட 24 கட்டடங்கள் நேற்று அகற்றப்பட்டன.
பெங்களூரில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கட்டடங்களை அகற்றி, தங்கள் இடத்தை மீட்க தென்மேற்கு ரயில்வே முன்வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கே.ஜி.ஹள்ளி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி கட்டப்பட்ட வீடுகள் உட்பட 25 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
நேற்று, இரண்டாவது நாளாக பணி தொடர்ந்தது. பானஸ்வாடி - ஹெப்பால் ரயில்வே வழித்தடத்தில் ரயில்வேக்கு சொந்தமான 512.25 சதுர மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் உட்பட 24 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரயில்வே நிலத்தை பாதுகாக்கவும், ரயில் பாதுகாப்பை உறுதி செய்யவும், யஷ்வந்த்பூர் - ஓசூர் வழித்தட பணிகள், பெங்களூரு புறநகர் ரயில் திட்ட பணிகளை எளிதாக்கும் வகையில், ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கொள்ளப்பட்டதாக, தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கன்மாடி கூறி உள்ளார்.

