தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கடலில் மூழ்கிய படகு 27 மீனவர்கள் மீட்பு

 கடலில் மூழ்கிய படகு 27 மீனவர்கள் மீட்பு

 கடலில் மூழ்கிய படகு 27 மீனவர்கள் மீட்பு


ADDED : ஆக 27, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடு: ப்பி: 28-: அரபி கடலில், அலையின் ஆர்ப்பரிப்பில் சிக்கிய படகு, நீரில் மூழ்கியது. அதில் இருந்த, 27 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

உடுப்பி மாவட்டத்தின், கங்கொல்லி மாங்கனீஸ் துறைமுகத்தில் இருந்து, 'ஸ்ரீ பாலாஞ்சநேயா' என்ற மீன்பிடி படகு, நேற்று முன் தினம் மதியம் மீன் பிடிப்பதற்காக அரபிக்கடலில் புறப்பட்டது. அதில் 27 மீனவர்கள் இருந்தனர்.

அந்த படகு, 3 கி.மீ., துாரத்தை கடந்து செல்லும் போது, கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகரித்தது. அலைகள் வேகமாக மோதியதில், படகின் பலகை உடைந்து, தண்ணீர் உள்ளே புகுந்தது. நீரில் மூழ்க துவங்கியது.

இது குறித்து, கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறி, உதவி கேட்டனர். இதையடுத்து, போலீசார் உடனடியாக அங்கு சென்றனர்.

சுமுக் மற்றும் மத்யாம்ருதா என்ற, மீன்பிடி படகுகள் மூலமாக, கடலுக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மூழ்கிய படகில் இருந்த, 27 மீனவர்களை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், படகு முழுதுமாக நீரில் மூழ்கிவிட்டதால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. மீனவர்கள் கங்கொல்லி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீனவர்களின் மீட்பு பணியில், அப்பகுதியினரும் போலீசாருக்கு உதவினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us