/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் நாடகமாடி மோசடி; 28 வயது இளம்பெண் கைது
/
காதல் நாடகமாடி மோசடி; 28 வயது இளம்பெண் கைது
ADDED : பிப் 17, 2026 11:49 PM
தார்வாட்: காதல் நாடகமாடி, திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, வாலிபர்களிடம் பணம் பறித்த இளம் பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தார்வாட் நகரில் வசிப்பவர் ஐஸ்வர்யா, 28. இவர் வசதியான வாலிபர்களை குறி வைத்து, காதலிப்பதாக நாடகமாடி, தன் வலையில் விழ வைப்பார். அவர்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் பெற்று கொள்வார். பின், திருமணம் செய்ய மறுத்து விடுவார்.
இதுபோன்று ஐஸ்வர்யா, ரேணுகா, ஆரோஹி என்ற வெவ்வேறு பெயர்களில், சஞ்சு தொட்டமணி, குரு வக்குந்தா உட்பட மூன்று வாலிபர்களை ஏமாற்றி, பணம் பறித்தார். குரு வக்குந்தாவிடம், 7 லட்சம் ரூபாய் பெற்று கொண்ட ஐஸ்வர்யா, திருமணம் செய்ய மறுத்தார்.
இதனால், விரக்கி அடைந்த குரு வக்குந்தா, நேற்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து, தார்வாட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த ஐஸ்வர்யாவை, குரு வக்குந்தாவின் உறவினர்கள் பிடித்து கொண்டனர்.
அவரிடம், பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது தங்கள் மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, கட்டாயப்படுத்தினர். ஐஸ்வர்யா மறுத்து தப்பியோட முயற்சித்தார். அவரை பிடித்து, சாலையிலேயே அடித்து உதைத்தனர். பின், தார்வாட் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

