தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் 2வது விமான நிலையம் 4 இடங்கள் இறுதி; அமைச்சர் தகவல்

பெங்களூரில் 2வது விமான நிலையம் 4 இடங்கள் இறுதி; அமைச்சர் தகவல்

பெங்களூரில் 2வது விமான நிலையம் 4 இடங்கள் இறுதி; அமைச்சர் தகவல்


ADDED : பிப் 09, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, நான்கு இடங்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்திய அரசு இடையில் கையெழுத்தான ஒப்பந்தப்படி, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., துாரத்தில் 2033 வரை புதிய விமான நிலையத்தை கட்ட முடியாது. ஆனாலும் பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

நிலம் கையகப்படுத்தும் செயல்முறை, விமான நிலையம் கட்டுமான பணிகளுக்கு அதிக நேரம் எடுக்கும். இந்த செயல்முறை, இப்போது துவங்கப்பட்டால் 2033ம் ஆண்டுக்கு பின் விமான நிலையம் செயல்பட துவங்கும்.

இதனால் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்யும் பணியை முன்கூட்டியே துவங்கினோம். தற்போது நான்கு இடங்களை இறுதி செய்துள்ளோம்.

மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொழில் முனைவோர், சுற்றுலா பயணியர், பொதுமக்களுக்கு வசதியான இடத்தில் விமான நிலையம் கட்டப்பட வேண்டும். விமான நிலைய கட்டுமானத்தில் முதலீடு செய்யும் நிறுவனமும் பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us