sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மசாஜ்' சென்டர் உரிமையாளரை கடத்திய 3 பேர் கைது  

 'மசாஜ்' சென்டர் உரிமையாளரை கடத்திய 3 பேர் கைது  

 'மசாஜ்' சென்டர் உரிமையாளரை கடத்திய 3 பேர் கைது  


ADDED : பிப் 19, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எலக்ட்ரானிக் சிட்டி: மசாஜ் சென்டர் உரிமையாளரை கடத்தி, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு பேகூர் அக் ஷய் நகரில் வசிப்பவர் ஆஷித் குமார். மசாஜ் சென்டர் உரிமையாளர். கடந்த 14 ம் தேதி இரவு ஆஷித்தும், அவரிடம் வேலை செய்யும் முன்னுகுமாரும் பைக்கில் சென்றனர். காரில் வந்த 3 பேர், பைக்கை மறித்தனர். ஆஷித்தை காரில் கடத்தி சென்றனர். தப்பியோடிய முன்னுகுமாருக்கு போன் செய்து இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.

இதற்கிடையில் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆஷித் தப்பினார்.

முன்னுகுமார் அளித்த புகாரில் எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரித்தனர். ஆஷித்தை கடத்திய, கொட்டிகெரேயின் அக் ஷய், மஞ்சுநாத், பிரஜ்வல் ஆகிய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கார், துப்பாக்கி, மூன்று மொபைல் போன், 9,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆஷித் நடத்தும் மசாஜ் சென்டருக்கு, வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதால், அவரிடம் பணம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us