தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயி கொலையில் 3 பேர் கைது ஆடு மேய்க்க வராததால் கோபம்

 விவசாயி கொலையில் 3 பேர் கைது ஆடு மேய்க்க வராததால் கோபம்

 விவசாயி கொலையில் 3 பேர் கைது ஆடு மேய்க்க வராததால் கோபம்


ADDED : ஜூன் 10, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: ஆடு மேய்க்க வருவதாக கூறி, 10,000 ரூபாய் பெற்று கொண்டு, பணிக்கு வராத நபரை கொலை செய்த வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, பெலகாவி எஸ்.பி., ராமராஜன் அளித்த பேட்டி:

பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், பெளவடி கிராமத்தில் வசிப்பவர் பகீரப்பா மல்லப்பா கிரகசாலே, 38. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மே 28ம் தேதியன்று, தொடவாடா கிராமத்தின், விவசாயி ஒருவரின் வயலில், பகீரப்பா மல்லக்கா கிரகசாலே இறந்து கிடந்தார்.

இவர் கொலை செய்யப்பட்டதாக, இவரது மனைவி, தொடவாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தன் கணவருக்கு எந்த நோயும் இல்லை; ஆரோக்கியமாக இருந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என, புகாரில் கூறியிருந்தார். விசாரணையை துவக்கிய போலீசார், பகீரப்பாவின் பின்னணியை ஆராய்ந்த போது, கொலைக்கான காரணம் தெரிந்தது.

பைலஹொங்களாவின், உடிகேரி கிராமத்தை சேர்ந்த ஹாலப்பாவிடம், ஆடு மேய்க்க வருவதாக கூறி, பகீரப்பா, 10,000 ரூபாய் முன் பணம் பெற்றிருந்தார். சில நாட்கள் பணி செய்தார்.

அதன் பின் அங்கு வந்த இவரது மனைவி, 'என் கணவர் உங்களிடம் ஏன் ஆடு மேய்க்க வேண்டும்' என கேட்டு, சண்டை போட்டு கணவரை அங்கிருந்து அழைத்து சென்றார்.

இதற்கிடையே, மே 28ம் தேதி, மீண்டும் ஹாலப்பாவை சந்தித்த பகீரப்பா, மது குடிக்க பணம் கேட்டார். அதன் பின் மது வாங்கி கொண்டு, பகீரப்பா, ஹாலப்பா, இவரது நண்பர் புன்டலீக தளவாரா ஆகியோர் ஒரே பைக்கில் சென்றனர்.

தொடவாடா கிராமத்தின் வயலில் அமர்ந்து, மூவரும் மது அருந்தினர். அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த ஹாலப்பாவின் கூட்டாளி அர்ஜுனும், இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

அப்போது, 10,000 ரூபாய் பெற்று கொண்டு, ஆடு மேய்க்க வராதது தொடர்பாக, பகீரப்பாவுக்கும், மற்றவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. மூவரும், பகீரப்பாவை கண் மூடித்தனமாக தாக்கினர்.

அடித்தபடியே, 200 மீட்டர் இழுத்து வந்து, அடித்தே கொலை செய்து விட்டு தப்பியோடியது, விசாரணையில் தெரிந்தது. கொலையாளிகள் மூவரையும் கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us