தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 3 வயது மகனை காப்பாற்ற சென்ற தந்தை மீது டிராக்டர் ஏறியதில் பலி

 3 வயது மகனை காப்பாற்ற சென்ற தந்தை மீது டிராக்டர் ஏறியதில் பலி

 3 வயது மகனை காப்பாற்ற சென்ற தந்தை மீது டிராக்டர் ஏறியதில் பலி


ADDED : ஆக 23, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: டிராக்டரில் அமர்ந்திருந்த தன், 3 வயது மகனை காப்பாற்ற சென்ற தந்தை மீது டிராக்டர் ஏறியதில் உயிரிழந்தார்.

ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிப்பூர் டவுன் கோட்டே ஒக்கலிகர் தெருவில் வசித்து வந்தவர் யஷ்வந்த், 37. அரகலகூடு போக்குவரத்து பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வரமஹாலட்சுமி பண்டிகையை ஒட்டி, குடும்பத்தினருடன், தான் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு சென்றார். கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை டிராக்டரில் வாங்கி வந்தார்.

அப்போது அங்கு வந்த தனது, 3 வயது மகனை, டிராக்டரில் அமர வைத்தவர், வாகன சாவியை எடுக்க மறந்து விட்டார். டிராக்டரில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, சாவியை திருக்கியதும், அந்த டிராக்டர் முன்நோக்கி நகர்ந்தது.

இதை பார்த்த யஷ்வந்த், மகனை காப்பாற்ற முயற்சித்தபோது, கீழே விழுந்ததில், அவர் மீது டிராக்டர் ஏறியது. படுகாயம் அடைந்த அவரை, குடும்பத்தினர், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹொளேநரசிப்பூர் போலீசார் விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us