sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கல்வி நிறுவனங்களில் சோதனை 31 மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

 கல்வி நிறுவனங்களில் சோதனை 31 மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு

 கல்வி நிறுவனங்களில் சோதனை 31 மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு


ADDED : மார் 06, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஹாஸ்டல்களில் திடீர் சோதனை நடத்திய போலீசார், மாணவர்கள் பலரும் போதை பொருள் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். மாணவர்களுக்கு கவுன்சலிங்செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூரின் மேற்கு மண்டல போலீசார், போதை பொருட்களின் தீய விளைவுகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

அவ்வப்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். அதே போன்று நேற்று காலை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு கல்லுாரிகள், ஹாஸ்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்லுாரிகள், ஹாஸ்டல்களிடம் அனுமதி பெற்று, மாணவர்களின் ரத்த மாதிரிகள் பெற்று, பரிசோதனை நடத்தினர். 1,200 மாணவர்களின் மாதிரிகள் பெறப்பட்டன.

இவற்றில், 585 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 31 பேர் போதை பொருள் உட்கொண்டிருப்பது உறுதியானது. இதனால், மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசாருடன் கல்லுாரிகள், ஹாஸ்டல்களின் நிர்வாகிகள், புண்யா மருத்துவமனை, பத்ம தேவய்யா மருத்துவமனை, ஷராவதி மருத்துவமனை, ஸ்ரீலட்சுமி மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us