sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு  2033க்குள் அமல்படுத்தப்படும்'

/

 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு  2033க்குள் அமல்படுத்தப்படும்'

 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு  2033க்குள் அமல்படுத்தப்படும்'

 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு  2033க்குள் அமல்படுத்தப்படும்'


ADDED : மார் 10, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, 2033ம் ஆண்டிற்குள் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

லோக்சபா மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, வரும், 2033ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம், நாடு முழுதும் அதிக பெண் முதல்வர்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். கர்நாடகா சட்டசபையில், 75 பெண் எம்.எல்.ஏ.,கள் இருப்பர்.

கர்நாடகாவில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால், நிச்சயம் பெண் ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமருவார். மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றிய பெருமை பிரதமர் மோடிக்கு தான் சேர வேண்டும்.

மகளிர், 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, தேவகவுடா பிரதமராக இருந்த போதே கொண்டு வரப்பட்டது. ஆனால், அப்போது சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாததால், மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எங்கள் குடும்பம் கடுமையாக உழைத்து உள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.






      Dinamalar
      Follow us