தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாகனம் ஓட்டியபடி மொபைல் போன் பயன்பாடு 10 மாதங்களில் 38,000 வழக்குகள் பதிவு

 வாகனம் ஓட்டியபடி மொபைல் போன் பயன்பாடு 10 மாதங்களில் 38,000 வழக்குகள் பதிவு

 வாகனம் ஓட்டியபடி மொபைல் போன் பயன்பாடு 10 மாதங்களில் 38,000 வழக்குகள் பதிவு


ADDED : நவ 13, 2025 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் பயன்படுத்துவோரை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் 38,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. அதே போன்று சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோரும் அதிகரின்றனர். சிக்னலை தாண்டுவது, வாகனம் ஓட்டும்போது, மொபைல் போனில் பேசுவது, அதிவேகம், பார்க்கிங் அல்லாத இடங்களில், வாகனங்களை நிறுத்துவது உட்பட, பல விதங்களில் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர்.

பெங்களூரின் சாலைகளில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் வேளையில், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோக்கள், படங்கள் பார்த்தும், வீடியோ காலில் பேசியும் பொழுதுபோக்குகின்றனர். பின் அதுவே பழக்கமாகிறது. பயணியர் உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருக்கும் சூழ்நிலை உள்ளது. அரசு போக்கு வரத்துக்கழக ஓட்டுநர்களும் மொபைல் போன் பயன்படுத்தியபடி பஸ் ஓட்டி, போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை. வழக்கு பதிவு செய்வது, அபராதம் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும், இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர்.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு போன்ற போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரில், வாகனம் ஓட்டியபடி மொபைல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது அபாயகரமானது.

போக்குவரத்து சிக்னல்கள், சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் பயன்படுத்துவோரை, போக்குவரத்து போலீசார் கண்காணிக்கின்றனர். அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்புகின்றனர். இது தொடர்பாக, நடப்பாண்டு ஜனவரி முதல், அக்டோபர் வரை 38,000 வழக்குகள் பதிவாகின.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us