தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.3.85 கோடி கடன் பெற்று மோசடி இயக்குநர் ஓம்பிரகாஷ் மீது வழக்கு

 ரூ.3.85 கோடி கடன் பெற்று மோசடி இயக்குநர் ஓம்பிரகாஷ் மீது வழக்கு

 ரூ.3.85 கோடி கடன் பெற்று மோசடி இயக்குநர் ஓம்பிரகாஷ் மீது வழக்கு


ADDED : ஆக 22, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிரபல இயக்குநரும், நடிகருமான ஓம் பிரகாஷ் ராவ், படத்தயாரிப்புக்காக 3.85 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.

கன்னட திரையுலகின் பிரபல இயக்குனர் ஓம் பிரகாஷ் ராவ், பல படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் தர்ஷன் நடிப்பில் திரைக்கு வந்த, யோதா என்ற படத்தில், இவருடன் நடிகர் பாஸ்கர் ஷெட்டி பணியாற்றினார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

ஓம் பிரகாஷ் ராவ், மூன்று ஆண்டுகளுக்கு முன், பீனிக்ஸ் என்ற படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக பாஸ்கர் ஷெட்டியிடம் கடன் கேட்டார். ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், இவரும் நம்பி பல கட்டங்களாக, 3.85 கோடி ரூபாய் கொடுத்தார். பணம் வாங்கி மூன்றாண்டு ஆகியும், திருப்பித்தரவில்லை; பல முறை கேட்டும் பயன் இல்லை.

பணத்தை கேட்க ஓம் பிரகாஷ் ராவின் வீட்டுக்கு, பாஸ்கர் ஷெட்டி சென்ற போது, அவரை திட்டி அவமதித்தார். கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே இயக்குனர் ஓம் பிரகாஷ் மீது, நடவடிக்கை எடுக்கும்படி கோரி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரின், பேடரஹள்ளி போலீஸ் நிலையத்திலும், நேற்று முன் தினம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணையை துவங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us