/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வரிசையில் நில்லுங்கள்' என்று கூறிய மெட்ரோ ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
/
'வரிசையில் நில்லுங்கள்' என்று கூறிய மெட்ரோ ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
'வரிசையில் நில்லுங்கள்' என்று கூறிய மெட்ரோ ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
'வரிசையில் நில்லுங்கள்' என்று கூறிய மெட்ரோ ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : டிச 31, 2025 07:29 AM
பெங்களூரு: மெட்ரோ ரயிலில் ஏறுவதற்கு, 'வரிசையில் நில்லுங்கள்' என்று கூறிய மெட்ரோ நிலைய ஊழியரை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்தில், கடந்த 28ம் தேதி மதியம், 12:30 மணிக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு பேர், மாதவாரா செல்வதற்காக, மூன்றாவது பிளாட்பாரத்திற்கு வந்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திரஜித், 'வரிசையில் நில்லுங்கள்' என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.
இதனால், கோபமடைந்த நான்கு பேரில் ஒருவர், இந்திரஜித்தை தொடர்ந்து ஏழு முறை கன்னத்தில் அறைந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அவருடன் வந்த மற்றொருவர், இந்திரஜித்தை காலால் எட்டி உதைத்தார்.
இதைப்பார்த்த மற்ற மெட்ரோ ஊழியர்கள் அங்கு வந்தனர்; பதற்றமாக காணப்பட்டது. உடனடியாக உப்பார்பேட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த அந்த நபர்கள், அடுத்த ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தனர். அங்கிருந்த வயதான இரு பயணியர், அவர்கள் தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் பிடித்துக் கொண்டனர். அவர்களுடன் மற்ற மெட்ரோ ஊழியர்களும் இணைந்து கொண்டனர்.
அங்கு வந்த போலீசார், நான்கு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்திரஜித் கொடுத்த புகாரின்படி, நான்கு பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், 'அந்த நபர்கள் அடித்த போதும் கூட, இந்திரஜித் பொறுமையாக இவ்விஷயத்தை எங்களிடம் கூறினர். ஊழியரை அவர்கள் தாக்கும் போது, அங்கிருந்த மற்ற பயணியர் அமைதியாக நின்றிருந்தது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது' என்றனர்.

