ADDED : செப் 25, 2026 03:58 AM

அ நிறம் | அளவு
பங்கார்பேட்டை: திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து, நேற்று காலை 8:00 மணிக்கு, புனேயை சேர்ந்த ஐந்து பேர் காரில் பெங்களூரு வந்து கொண்டிருந்தனர். பங்கார்பேட்டை மரகல் என்ற இடத்தில் சென்னை -- பெங்களூரு விரைவு சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
இந்த கார் பகல் 2:00 மணி அளவில், ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த காரில் பயணித்த நவநாத் கெய்க்வாட், 40, கிரண் விஷால், 33, விஸ்வநாத் பவார், 32, பவார், 35, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோமநாத், 53, என்பவர் பங்கார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் கார் முழுமையாக சேதம் அடைந்தது. தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பங்கார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
